‘ஆதாயம் 2017′ – தேசிய வர்த்தக சந்தை இம்மாதம் 14, 15, மற்றும் 16ம் திகதிகளில்


sdfg

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சிச்திட்டத்தால் (UNDP) ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒரு தேசிய வர்த்தகச் சந்தையான “ஆதாயம் 2017″ இம்மாதம் 14, 15, மற்றும் 16ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 10 மணி தொடக்கம் 7 வரை இந்த வர்த்தகச் சந்தை இடம்பெறவுள்ளது.

பல்தரப்பட்ட உள்நாட்டு தொழில்முனைவோர்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்நிகழ்வு இலங்கையின் தொழிற்றுறையைக் கொண்டாடுவதுடன் நிலைபேண்தகு அபிவிருத்தியையும் உள்ளடங்கிய வளர்ச்சியையும் முன்னிறுத்துவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சிச்திட்டம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அறிக்கை:

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
ஊடக அறிக்கை

ஆதாயம் 2017: தேசிய வர்த்தக சந்தை
இலங்கை சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான நிலைபேறான அபிவிருத்தி மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தல்

11 ஜூலை 2017, கொழும்பு: ஒரு தேசிய வர்த்தகச் சந்தையான ஆதாயம் 2017 ஆனது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சிச்திட்டத்தால் (UNDP) ஒழுங்கு செய்யப்பட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (கொழும்பு) 2017 ஜூலை மாதம் 14, 15, மற்றும் 16ம் திகதிகளில் காலை 10 மணி தொடக்கம் 7 மணி வரை நடைபெறவுள்ளது.

அம்பாறை, அனுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மொனராகலை, முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய 10 மாவட்டங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட 200ற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள், உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இந்த மூன்று நாட்களும் வர்த்தகச் சந்தை இயங்கவுள்ளது.

இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களை மேலும் தரமுயர்த்துதல் மற்றும் பாரிய சந்தையுடன் தொடர்புறுதல் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான வணிகக் கூட்டுமுயற்சியினை விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றுக்காக ஒரு நன்மைதரு தளத்தை உருவாக்குவதே ஆதாயம் 2017 இன் முக்கிய குறிக்கோளாக அமைந்துள்ளது.

இந்த தொழில்முனைவோர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், இலங்கை அரசின் இணைவோடு UNDP இனால் ஆதரவளிக்கப்பட்டவர்களாவர். உள்நாட்டுப் பொருளாதார அபிவிருத்திக்கான ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், கனேடிய அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே அரசாங்கம் ஆகியவற்றின் நிதியளிப்பில் இந்த ஆதரவளிப்புக்கான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், UNDP ஆனது உள்நாடு மற்றும் தேசிய மட்டம் ஆகிய இரு தளங்களிலும் இலங்கை அரசுடன் இணைந்து துணைவராக இருந்து, தேசிய வடிவமைப்பு மையம் (NDC), தொழிற்றுறைத் தொழினுட்ப நிறுவகம் (ITI), தொழிற்றுறைச் சேவைகள் பணியகம் (ISB) போன்றவற்றில் பங்களிப்புச் செலுத்தியது. இது இந்த உற்பத்தியாளர்களின் நிலைபேறான தன்மையினை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களின் வணிகங்களை விரிவாக்கம் செய்தல், புத்தாக்கங்களை வளர்த்தெடுத்தல், வேலைவாய்ப்பு, திறன் அபிவிருத்தி மற்றும் உள்நாட்டு வணிகம் ஆகியவை சிறந்து விளங்குதலை இலங்கைக்கான UNDP தன் இலக்காகக் கொண்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை செலுத்துகின்றன. 2030 நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்துவதில் இத்துறையானது அதிக தகுதியைக் கொண்டுள்ளது.

UNDP இன் இலங்கை நாட்டுக்கான பதில் பணிப்பாளரான திருமதி லோவிட்டா ராம்குடி இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, ‘2030 நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சிநிரல் ஆனது மக்கள், பூமி மற்றும் செழுமைக்கான செயற்பாட்டிற்கான திட்டம் ஆகும். ஓர் உயர்ந்த நடுத்தர வருமானம் பெறும் நாடாக இலங்கை தன்னை உருவாக்கிக் கொள்ள விரும்புவதால், இந்நாட்டில் ஏற்கனவே உள்ள தகுதிச்சிறப்பினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு ஒரு முக்கிய வாய்ப்பு உருவாகியுள்ளதென நாம் நம்புகிறோம். எவ்வாறாயினும், ஒருவரை அதிகமாக உற்பத்தி செய்கவென ஊக்குவித்தல் மாத்திரம் இனிப் போதுமானதாக இருக்காது. – அவர்களின் உற்பத்திப் பொருட்கள் போட்டித்தன்மைக்கு ஏற்றதாகவும் அதனைச் சமாளித்து முன் செல்லக் கூடியனவாகவும் இருப்பதோடு தேசிய, சர்வதேச சந்தைகளுக்கான அணுகலையும் கொண்டிருக்கும் நிலையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலம் மட்டுமே தொழில்முனைவோர்கள் தம் வணிகங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இது இலங்கை அரசாங்கத்தினுடனானதும் எம் அபிவிருத்திப் பங்காளர்களினதும் உறுதியான கைகோர்ப்பினால் மாத்திரமே சாத்தியமாகும். இதன் மூலம் நிலைபேண்தகு அபிவிருத்தியினை இணைந்து பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு நாம் இவ்வாறு இலங்கை மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.’ என்று தெரிவித்தார்.

உள்நாட்டு கலை மற்றும் கைப்பணிப் பொருட்களில் இருந்து பாரம்பரிய சுவைகூட்டும் சரக்குகள், பனை, நார், பட்டிக் மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் போன்றவற்றை ‘ஆதாயம் 2017′ கொண்டுவரவுள்ளது. பல்தரப்பட்ட உள்நாட்டு தொழில்முனைவோர்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்நிகழ்வு இலங்கையின் தொழிற்றுறையைக் கொண்டாடுவதுடன் நிலைபேண்தகு அபிவிருத்தியையும் உள்ளடங்கிய வளர்ச்சியையும் முன்னிறுத்துகின்றது. (நு)


unnamed (1)unnamed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>