இவ்வருடத்தில் மாத்திரம் சவுதியில் 44 பேருக்கு தூக்கு


saudi arabia

போதைப் பொருள் வியாபாரம் மற்றும் மனிதப் படுகொலை என்பவற்றில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறு பேர் சவுதிஅரேபியாவில் தூக்கிலிட்டுக் கொலை செய்யப்பட்டதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது.

2017 ஆம் வருடத்தில் ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட அதிதொகையினர் இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானியர் ஒருவரும், கொலைக் குற்றச் செயலுடன் தொடர்புடைய மற்றும் ஐவரும் இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

கடந்த 2017 ஜனவரி 01 ஆம் திகதி முதல் இன்றுவரை 44 பேருக்கு மரண தண்டனை வழங்கி சவுதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>