சிறுத்தைக் குட்டிக்கு பாலூட்டும் பெண் சிங்கம்


_96927194_lioness1

சிறுத்தைக் குட்டிக்கு பாலூட்டும் பெண் சிங்கம் ஒன்று தொடர்பில் தன்சானியாவில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

தான்சானியாவின் பாதுகாக்கப்பட்ட பகுதியான கோரோன்கோரோவில் உள்ள ‘டுடூ சஃபாரி’ விடுதியில் தங்கியிருந்த ஜுப் வான் டெர் லிண்டே என்பவர் இந்த காட்சியை பார்த்துள்ளார்.

கடந்த ஜூன் மாத இறுதியில் 3 சிங்கள் குட்டிகளை ஈன்ற இந்த பெண் சிங்கம் அநாதரவான நிலையில் உள்ள சிறுத்தை குட்டி ஒன்றுக்கே பாலூட்டி வருகின்றது.

“தனக்கு பிறக்காத வேறு சிங்கக் குட்டிகளை, பெண் சிங்கங்கள் தத்தெடுத்துக் கொண்ட சம்பவங்கள் உண்டு. ஆனால் இது முன்னெப்போதும் நடக்காதது. பொதுவாக உணவுச் சங்கிலியில் தங்களுக்கு போட்டியாக இருக்கும் சிறுத்தை போன்ற மற்ற வேட்டை மிருகங்களின் குட்டிகளை பார்த்தால் பெரும்பாலான பெண் சிங்கங்கள் அவற்றை கொன்றுவிடும். ஆனால், இது ஒரு தனித்துவமான சம்பவம்” என சிங்கங்கள் குறித்த நிபுணர் லூக் ஹண்டர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார். (நு)
_96927194_lioness1

_96927675_lioness8

_96927673_lioness5

_96927199_lioness4

_96927677_lioness7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>