ரங்கன ஹேரத் பந்து வீச்சில் மற்றுமொரு சாதனை


dfe

இலங்கை – சிம்பாமே அணிகளுக்கிடையில் நடைபெறும் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சிம்பாவே அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இரண்டாவது நாள் இன்றைய ஆட்டத்தின் போது இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் வீழ்த்தியது.

இப்போட்டியில் பந்துவீசிய இலங்கை அணியின் வீரர் ரங்கன ஹேரத் 116 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். அசேல குணரத்ன மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்கள் வீதம் பெற்றனர்.

ரங்கன ஹேரத் தான் இதுவரை விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய 30 ஆவது போட்டி இதுவாகும் என்பது சாதனைப் புத்தகத்தில் பதியப்படுகின்றது.

இனிங்சின் முதலாவது போட்டியில் தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கும் இலங்கை அணி தற்பொழுது இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  (மு)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>