கோவணத்துடன் கொழும்பில் ஆர்ப்பாட்டம்


Screen Shot 2017-07-17 at 10.15.25 AM

கோவணத்துடன் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தேசிய விவசாயிகள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதியன்று, கொழும்பில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான மானியம் மற்றும் இழப்பீடுகள் இல்லாமல் செய்தல், உரமானியத்தை உரிய முறையில் வழங்காமை, அறுவடைக்கு உரிய விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய விவசாயிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு, கோட்டை ரயில்வே நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, மகஜரொன்றையும் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>