கடலில் தத்தளித்த யானையை மீட்கும் பணிகளில் ஈடுப்பட்ட கடற்படையினருக்கு பாராட்டு


1

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானையை மீட்கும் பணிகளில் ஈடுப்பட்ட கடற்படையினருக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தன தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் இவர்களை சந்தித்த கடற்படை தளபதி சிநேகப்பூர்வமான உரையாடலில் ஈடுபட்டார்.

கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த யானையை மீட்கும் பணிகளில் ஈடுப்பட்ட கடற்படையினருக்கு தனது வாழ்த்துக்களை இதன்போது கடற்படை தளபதி தெரிவித்தார்.

கடந்த 11 ஆம் திகதி வடகிழக்கு கடலில் சுமார் 16 கடல் மைகள் தொலைவில் அடித்துச்செல்லப்பட்ட யானையை பாதுக்காப்பாக மீட்கும் பணிகள் கடற்படையினரின் கடுமையான முயற்சியில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நு)
1

5

4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>