முறையான நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்த அரசாங்கம் பாடுபடுகிறது – ஜனாதிபதி


maithripala sirisena

நிதி முகாமைத்துவத்தில் இருக்க வேண்டிய தூய்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாத்து தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் பாடுபடுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று (17) கொழும்பில் ஆரம்பமான பணச்சலவை தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய குழுவின் 20 ஆவது வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

41 உறுப்பு நாடுகள் மற்றும் பல சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்பில் நடைபெறும் இந்த மாநாடு இன்றிலிருந்து, 21 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, பண சலவை தொடர்பில் அனைத்து நாடுகளும் முகம்கொடுத்துள்ள சவால்களை வெற்றிகொள்வதாயின் அது தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிணைப்புக்கள், உடன்பாடுகள் மற்றும் சமவாயங்களை உரியவாறு அமுல்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் நேர்மையுடன் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

பணச்சலவையை தடுப்பதன் மூலம் அனைத்து நாடுகளிலும் தேசிய பொருளாதாரம் பலமடைவதுடன், சர்வதேச ரீதியிலும் நிதி முகாமைத்துவத்தில் மிக முக்கியமானதென ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

அரச நிதி முறைகேடு மற்றும் பணச்சலவை தொடர்பில் செயற்படுவதற்காக இலங்கை அரசாங்கம் பலமான அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்பை நிறுவியுள்ளதுடன், அந்த நிறுவனம் தற்போது மிகவும் வினைத்திறனாகவும் வெற்றிகரமாகவும் செயற்படுவதாக தெரிவித்தார்.

பணத்தூய்மையாக்கல் ஊடாக பயங்கரவாத அமைப்புக்களுக்கும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பெருமளவு நிதி கிடைப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பயங்கரவாதத்துக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் என்ற வகையில் பணச்சலவையை தடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நன்றாக இனங்கண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பணச்சலவை தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்பாடுகள், சமவாயங்கள் மற்றும் உடன்படிக்கைகளுக்கு அமைவாக அவற்றை உரியவாறு அமுல்படுத்த எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற வகையில் எடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பணச்சலவை தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய குழு தனது அங்கத்துவ நாடுகளில் பணச்சலவை மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலை தடுப்பதற்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நிதி செயலணியின் 40 விதந்துரைகளை முறையாக நிறுவுதல் மற்றும் அமுல்படுத்துதல் தொடர்பில் கண்காணித்து வருகிறது. தற்போது இடம்பெறும் பணச்சலவை மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தலுக்காக பின்பற்றப்படும் முறைமைகள் மற்றும் அவற்றிலுள்ள ஆபத்து நிலைகள் தொடர்பில் தனது அங்கத்தவ நாடுகள் மற்றும் பொதுமக்களை தெளிவூட்டுவதற்காக தொழில்நுட்ப உதவி, பயிற்சி மற்றும் தந்திரோபாய ஆய்வினை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்குதலின் ஊடாகவும் இக்குழு தனது உறுப்பு நாடுகளுக்கு உதவியளிக்கிறது.

2016-2018 ஆண்டுகளுக்காக பணச்சலவை தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய குழுவின் தலைமையை இலங்கை வகிக்கிறது. இம் முறை இடம்பெறும் வருடாந்த மாநாடு இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாகும்.

மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி இந்ரஜித் குமாரசாமி, சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, பணச்சலவை தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய குழுவின் நிறைவேற்று செயலாளர் கோடின் ஹூக் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர். (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>