சிங்கள பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரமழான் விழாவால் பதற்றம்


aada

ஹிக்கடுவை ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரமழான் விழாவுக்கு, அப்பாடசாலையில் பழைய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹிக்கடுவை கல்வி வலய பிரிவின் ரமழான் விழாவுக்கே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள கிங்தொட சஹிரா வித்தியாலயத்தின் மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் பதற்ற நிலைமையை அடுத்து அப்பாடசாலை மாணவர்களை குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமது பாடசாலையில் இவ்வாறானதொரு விழா இதற்கு முன்னர் நடத்தப்படவில்லை எனவும், பௌத்த பாடசாலையில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்” பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறாயினும், அழைக்கப்பட்டிருந்த மற்றைய பாடசாலை மாணவர்களின் பங்கேற்பில் முஸ்லிம் கலாசார விழாவாக இந்த விழா இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>