முஸ்லிம் திணைக்களத்தின் 9ஆவது அல்- குர்ஆன் கிராஅத் மனன பரிசளிப்பு விழா


20394518_10212392262976081_136695167_o

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் கலாசார திணைக்களமும் இணைந்து கடந்த மூன்று தசாப்த காலமாக ஏற்பாடு செய்து தேசிய ரீதியாக நடத்தப்படும் அல் – குர்ஆன் கிராஅத் மனனப் போட்டி இம்முறை 9 ஆவது தடவையாகவும் நடத்தப்பட்டு, அதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தபால், தபால் சேவைகள் முஸ்லிம் கலாசார அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையிலும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம். ஆர். எம். மலிக் (நளீமி) வழிகாட்டலிலும் அஷ்ஷேக் எம்.எம்.எம். முப்தி (நளீமி)யின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு பதக்கங்களும் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

போட்டியில் முதல் இடத்தை பெறும் மாணவர்களுக்கு சர்வதேச ரீதியாக (சவூதி அரேபியா, மலேசியா, துபாய், ஈரான், துருக்கி) நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விடயம்.

அந்த வகையில் இம்முறை இரண்டு மாணவர்கள் துபாய், துருக்கி நாடுகளில் நடத்தப்பட்ட அல் – குர்ஆன் கிராஅத் மனன போட்டிகளில் பங்கு கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. (ஸ)

20394518_10212392262976081_136695167_o 20394545_10212392262376066_1190157915_o 20394632_10212392262576071_1255669792_o 20424569_10212392261016032_412892477_o 20446358_10212392262736075_343790990_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>