ஆளில்லாமல் இயங்கும் முச்சக்கரவண்டி – இலங்கையரின் கண்டுபிடிப்பு (Video)


DSC06696

தனது திறமையால் ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை மாற்றியுள்ளார் நுவரெலியா இளைஞர் ஒருவர்.

நுவரெலியா களுகெலை பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த ருவான் குமார (வயது 31) என்ற நபரே இவ்வாறு தானியிக்க முச்சக்கரவண்டியை கண்டுபிடித்தவராவர். இவர் முச்சக்கரவண்டியை (ரிமோட் கொண்ரோல்) ஊடாக இயக்கக் கூடிய வகையில் 5 நாட்களில் இதனைத் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இயந்திரவியல் தொழில் ஈட்டுப்பட்டுள்ள இந்த நபர் தனது எரிபொருள் ஊடாக ஓட்டம் எடுக்கும் முச்சக்கரவண்டியை (ரிமோட் கொண்ரோல்) ஊடாக இயங்க வைப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சி பலனளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தனது சொந்த செலவில் தன்னிடம் உள்ள முயற்சியைக் கொண்டு தயார் செய்யப்பட்ட இந்த முச்சக்கரவண்டியை போல எதிர்காலத்தில் இன்னும் பல (ரிமோட் கொண்ரோல்) மூலம் கட்டுப்படுத்த கூடிய இயந்திரங்களைக் கண்டுபிடிக்க முடியும் எனவும், அதற்கான பொருளாதார ரீதியில் உதவிகளை செய்யுமிடத்து இன்னும் பல்வேறு வகையான தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகளை கண்டுபிடிக்க முடியும் என எமது ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும் போது சமிந்த ருவான் குமார குறிப்பிட்டுள்ளார். (கி|ஸ)

DSC06669 DSC06677 DSC06696

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>