காருக்குள் மூச்சுத் திணறி உயிரிழந்த சிறுவன் முஹம்மது இன்ஸாப்


image_a0927f046c (1)

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவன் காருக்குள் சிக்குண்டு மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில்  அக்கரைப்பற்று பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது.  ஒலுவில் 6 ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது லாபீர் முஹம்மது இன்ஸாப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த சிறுவன், சம்பவதினம் மாலை 5.00 மணியளவில் தனது வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரைத் திறந்து உள்ளே சென்று, காரின் கதவுகளை பூட்டிக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சிறுவனை காணவில்லையென பெற்றோர் தேடிவந்த நிலையில், காரின் உரிமையாளர் காரைத் திறந்து பார்த்த போது, சிறுவன் உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.

சிறுவனால் காரின் கதவுகளைத் திறக்க முடியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, காருக்குள்ளேயே, சிறுவன் உயிரிழந்துள்ளாரென பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவனின் சடலம் ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். (மு)

image_a0927f046c (1)

6 comments

  1. Innalillahi wainna ilaihi rajioon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>