தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தம்


A fisherman removes fishes from a net at a fishing harbour in Chennai

தமிழக, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையறை அற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் நேற்று 12 மீன்பிடி படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 49 மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரியே அவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பாக்குநீரிணையில் மீன்பிடிப்பதற்கு தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (எம்|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>