ஈரானில் ஹசன் ரௌஹானியின் புதிய அமைச்சரவை


hasn rouhani

ஈரான் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுள்ள ஹஸன் ரௌஹானி நேற்று புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதாகவும் குறித்த அமைச்சரவையில் பெண்கள் எவரும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தான் நடுநிலைவாதியாக செயற்படுவதாக ரௌஹானி தெரிவித்திருந்த நிலையில் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

1979ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியை தொடர்ந்து அங்கு ஒரு தடவை மாத்திரமே பாராளுமன்றத்தில் பெண் பிரதிநித்துவம் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஷியா முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஈரானிய பாராளுமன்றத்தில் சுன்னி முஸ்லிம்கள் 10 சதவீதமே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>