கம்பஹா மாவட்டத்தில் சுமார் 17 இலட்சம் வாக்காளர்கள் பதிவு


electionnne

கம்பஹா மாவட்டத்திலுள்ள 13 தேர்தல் தொகுதிகளில் மொத்தம் 17,05,310 வாக்காளர்கள் பதிவாகியுள்ள நிலையில், மினுவாங்கொடை தேர்தல் தொகுதியில் மாத்திரம் 1,38,385 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக கம்பஹா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை தொகுதியிலுள்ள 94 தேர்தல் வட்டாரங்களிலேயே இப்பதிவுகள் 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்றுள்ளதாகவும் உதவி ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் இத்தொகுதியில், மொத்தம் 1,36,013 வாக்காளர்களே பதிவாகியிருந்தனர். கடந்த 2015 ஆம் ஆண்டை விடவும் 2016 ஆம் ஆண்டில் மினுவாங்கொடை தொகுதியில் மேலதிகமாக 2,372 வாக்காளர்கள் பதிவாகியிருப்பதாகவும், இது 2017 ஆம் ஆண்டின் பதிவுகளில் மேலும் சுமார் 3 ஆயிரம் பேர் வரை அதிகரிக்கலாம் என்றும் உதவி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடத்திற்கான தேருநர் இடாப்பின் வாக்காளர் பதிவுகள் நாடளாவியரீதியில் ஜூலை மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பிலான தேருநர் இடாப்புக்கள் ஒவ்வொரு மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாகாண சபை அலுவலகங்கள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக எதிர்வரும் வியாழக்கிழமை முதல் காட்சிப்படுத்தப்படும் என்றும் உதவி ஆணையாளர் மேலும் தெரிவித்தார். (நு)

-ஐ. ஏ. காதிர் கான்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>