கட்டாருக்குள் நுழைய 80 நாடுகளுக்கு இலவச வீசா, சட்டம் உடன் அமுல்


download
வீசா இல்லாமல் 80 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளை கட்டாருக்குள் அனுமதிப்பதற்கான புதிய சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக கட்டார் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
கட்டார் நாட்டுக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கட்டாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைப்பெற வரையறை கிடையாது. அத்துடன், ஒருவர் பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகை தரும் பயணிகளின் தேசத்தை பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறையானது (30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில்) மாறுபடுகிறது.
கட்டார் சுற்றுலாத்துறை சேர்மன் ஹாசன் அல் இப்றாஹீம் இது தொடர்பில் கூறுகையில்,
 “கட்டாருக்கு வருகையின் போது 80 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலவச விசாவிற்கு தகுதிபெறுகிறார்கள். இப்பிராந்தியத்தில் கத்தார் இப்போது மிகவும் திறந்தவெளி நாடாகியுள்ளது.   எங்களுடைய புகழ்பெற்ற விருந்தோம்பல், கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை பொக்கிஷங்களை பார்க்க பயணிகளை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்,” என கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 2016 இல் கட்டார் இலவச டிரான்சிட் விசாவை அறிமுகம் செய்தது. பயணிகள் குறைந்தபட்சம் 5 மணி நேரங்களில் இருந்து 96 மணி நேரங்கள் (நான்கு நாட்கள்) டிரான்சிட் விசாவில் கட்டாரில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த மே மாதம் கட்டார் ஏர்வேஸ் தோகாவில் 5 மற்றும் 4 ஸ்டார் ஓட்டல்களில் இலவச தங்கும் வசதியுடன் கொண்ட சிறப்பு சலுகையை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது விசா தொடர்பான நகர்வு அந்நாட்டு உள்துறை உத்தரவின்படி அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.   (மு)

4 comments

  1. How about Sri Lanka

  2. Idu enna picture

  3. ஆனால் இலங்கையருக்கு இந்த சலுகை இல்லை. இலங்கையர்கள் வழமைபோல் விஸாவுக்கு விண்ணப்பித்துப் பணம் செலுத்தித்தான் விஸா பெற வேண்டும்

  4. ஆனால் இலங்கையருக்கு இந்த சலுகை இல்லை. இலங்கையர்கள் வழமைபோல் விஸாவுக்கு விண்ணப்பித்துப் பணம் செலுத்தித்தான் விஸா பெற வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>