வடகொரியாவும் – அமெரிக்காவும் கோபத்தின் எல்லையில்


korean-elbow-rule

அமெரிக்கா இராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீச வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவுக்கு கடும் எச்சரிக்கையுடன் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வட கொரியா மீது ஐ.நா. பொருளாதாரத் தடை விதிக்க காரணமாக இருந்த அமெரிக்கா உரிய விலை கொடுக்க நேரிடும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பசிபிக் கடலில் உள்ள தனக்கு சொந்தமான குயாம் தீவு பகுதியில் அமெரிக்கா இராணுவ பயிற்சி முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.  இந்த இராணுவப் பயிற்சி இடம்பெறும் நிலை மீதே ஏவுகணைத் தாக்குதல் நடாத்த வடகொரியா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  (மு)

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>