இலங்கை தொடரிலிருந்து விராட் கோஹ்லி விலகல்!


INDIA VS ENGLAND

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கடந்த வருடம் முதல் ஓய்வின்றி தொடர்ச்சியாக விளையாடி வருவதன் காரணமாக அவருக்கு ஒய்வு வழங்குவதற்கு இந்திய கிரிக்கெட் அதிகாரிகள் யோசித்து வருவதாக இந்திய பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கான இந்திய அணித்தேர்வுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தேர்வின் போது விராட் கோஹ்லிக்கு ஒய்வு வழங்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகளுடன் நடைபெற்ற போட்டி முதல் கடந்த வாரம் நடைபெற்ற இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரை இந்திய அணி 43 முத்தரப்பு போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் அதில் 42 போட்டிகளில் விராட் கோஹ்லி விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இந்திய அணித்தலைவருக்கு ஒய்வு வழங்கப்பட்டால் எதிர்வரும் போட்டிகளுக்கு இந்திய அணித்தலைவராக ரோஹித் சர்மா செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.(அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>