கங்கையில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் மரணத்துக்கான காரணம்


ASDA

நேற்று முன்தினம் நில்வலா கங்கையில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 16 வயது சிறுமியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் மூலம் பாடசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த கைத்தொலைபேசியை அதிபர் கண்டெடுத்ததுடன் தொலைபேசியை திருப்பித் தரவேண்டுமாயின் பெற்றோர் வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதுடன் பெற்றோரை கட்டாயமாக பாடசாலைக்கு வருமாறு தகவல் அனுப்பப்பட்டதனால் ஏற்பட்ட கவலையினாலே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவர் ஆற்றில் குதித்துள்ளதாக நேற்று முன்தினம் அக்குரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சோதனை நடத்திய பொலிஸார் திப்பாட்டுவாவே பாலத்திற்கு அருகாமையில் நில்வலா கங்கையில் மிதந்து கொண்டிருந்த சிறுமியின் புத்தகக்கப்பையினை மீட்டிருந்தனர்.

இதேவேளை, பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் நேற்று சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அக்குரஸ்ஸ போரம்ப பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி இவ்வருடம் சாதாரணதர பரீட்சைக்கு முகம் கொடுக்கவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (அ|நு)
ASDA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>