மஹாஇலுப்பல்லம விதை பண்ணை பங்களாதேசுக்கு குத்தகை – பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


Turkey-Protest_Horo-13

மஹாஇலுப்பல்லம பகுதியில் உள்ள விதை பண்ணையினை பங்களாதேஷ் நாட்டிற்கு 150 வருடங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறி அரசியல்வாதிகள், பொதுமக்கள், சிவில் சமூக அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் குறித்த விதை பண்ணைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

150 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படும் குறித்த விதை பண்ணை குறித்த காலம் முடிவடைந்ததும் மீண்டும் 105 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் இதன்மூலம் 20 பரம்பரைகள் பங்களாதேஷ் நாட்டுக்கு அடிமைப்பட்டிருக்க வேண்டி வரும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குறித்த மக்கள் சுமார் 67 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு நிறுவனத்தை வெளிநாடொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். (அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>