மக்கள் வங்கியின் தன்னியக்க வங்கி பிரிவுகள் மீரிகம மற்றும் வேயாங்கொடை புகையிரத நிலையங்களில்


Merigama

நாடு முழுவதுமுள்ள 100 புகையிரத நிலையங்களில் 100 தன்னியக்க வங்கி அலுவல்கள் பிரிவுகளை ஸ்தாபிக்கும் வேலைத் திட்டத்தை மக்கள் வங்கி ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக, அண்மையில் மீரிகம புகையிரத நிலையத்தில் தன்னியக்க வங்கி அலுவல் பிரிவும் (Self Banking Unit) வேயாங்கொடை புகையிரத நிலையத்தில் தன்னியக்க இயந்திரமும்(ATM) அமைக்கப்பட்டன.

அதிநவீன தொழில்நுட்பத்துடனான இந்த தன்னியக்க வங்கி அலுவல் பிரிவுகள் மூலம், பணத்தை
மீளப்பெறல், பண வைப்புச் செய்தல் மற்றும் பட்டியல்களைச் செலுத்துதல் போன்ற அதிநவீன வசதிகளை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். தன்னியக்க டெலர் இயந்திரங்கள் (ATM), பணம் வைப்புச் செய்யும் இயந்திரங்கள் (CDM) மற்றும் பட்டியல்களைச் செலுத்தும் இயந்திரங்கள் (Kiosk) என்பன, வருடத்தின் 365 நாட்களிலும், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் சேவைகளை வழங்கி வருகின்றன.

புகையிரத நிலையங்களைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகள், தங்களது வங்கி அலுவல்களை இலகுவாகவும், செயற்திறனுடனும், புகையிரத நிலையங்களிலேயே மேற்கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், மக்கள் வங்கி, போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. புகையிரத
நிலையங்களை அழகிய தோற்றத்துடன் பொது மக்களின் மனதைக் கவரும் வகையில் மீளமைக்கும் நோக்குடன் புகையிரத திணைக்களத்தினால் திட்டமிடப்பட்ட சீர்திருத்த வேலைத் திட்டத்துடன் இணைந்ததாக மக்கள் வங்கியின் டிஜிட்டல் வங்கி செயற்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் வங்கியின் தலைவர் ஹேமசிரி பெர்னாந்து, பிரதம நிறைவேற்று அதிகாரி / பொது முகாமையாளர் என்.வசந்தகுமார், புகையிரத பொது முகாமையாளர் எஸ். மகானாம அபேவிக்கிரம, முன்னாள் புகையிரத பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன ஆகியோருடன், புகையிரத திணைக்கள அதிகாரிகளும், மக்கள் வங்கியின் குழும மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ அங்கத்தவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். (நு)
1

2

Merigama

Veyangoda

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>