NOKIA 3ஸ்மார்ட் தொலைபேசி டியூரபிலிட்டி சோதனையில் வெற்றி (Video)


Nokia-3-Durability-Test-7-1068x614

உலகின் பிரபலமான நோக்கியா நிறுவனம் பல்வேறு தடைகளை தகர்த்து மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் கால் பதித்துள்ள நிலையில், அந்நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 3 டியூரபிலிட்டி டெஸ்டிங்கில் அதிர்ச்சியளித்துள்ளது. .

நோக்கியாவின் விலை குறைந்த ஸ்மார்ட்போனான நோக்கியா 3 சமீபத்தில் டியூரபிலிட்டி டெஸ்ட் செய்யப்பட்டது. பிரபல யூடியூப் தளம் செய்த டியூரபிலிட்டி டெஸ்டிங்கில் நோக்கியா 3 பழைய நோக்கியா பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் மெட்டல் மூலம் உருவாகியுள்ள நோக்கியா 3 அதிக உறுதித் தன்மை கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. முன்பக்க டிஸ்ப்ளே கொரில்லா கிளாஸ் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பதால் முன்பக்கம் லெவல் 6 வரை அதிக சேதத்தை ஏற்படுத்தவில்லை. இதே பாதுகாப்பு முன்பக்கம் செல்ஃபி கேமரா, நோக்கியா லோகோ மற்றும் முன்பக்க பட்டன்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் பிளாஸ்டிக் என்பதால் கேமரா, பிளாஷ் மற்றும் பேனல் உள்ளிட்டவை டியூரபிலிட்டி டெஸ்டில் சோபிக்கவில்லை. எனினும் நோக்கியா 3 தோற்றத்தை அழகாக வெளிப்படுத்தும் மெட்டல் பயன்பாடு போனின் உறுதி தன்மையை காப்பாற்றியிருக்கிறது. பவர், வால்யூம் பட்டன்கள், சிம் கார்டு மற்றும் மெமரி ஸ்லாட் உள்ளிட்டவையும் மெட்டல் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இறுதியாக மேற்கொள்ளப்பட்ட வளைக்கும் சோதனையில் நோக்கியா 3 வெற்றி பெற்றுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா 3 ஒட்டுமொத்த சோதனையில் பின்புற பேனல் தவிர மற்ற அம்சங்களில் குறிப்பிடத்தக்க திறன் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

நோக்கியா 3 டியூரபிலிட்டி டெஸ்ட் வீடியோவினை கீழே காணலாம்..(ச)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>