மூன்று கேமராக்கள் கொண்ட மோட்டோ ஜி5 எஸ் பிளஸ் அறிமுகம்


moto-g5-plus-3

மோட்டோரோலா நிறுவனத்தின் வெளியீடுகளில் ஒன்றான மோட்டோ ஜி கையடக்க தொலைபேசி வரிசையில் மோட்டோ ஜி5-க்கு அடுத்து, மூன்றாவது வெளியீடான ஜி5 எஸ் பிளஸ் நாளை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கையடக்க தொலைபேசி சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்த ஸ்மார்ட் போனில் இரட்டை பின் புற கேமரா பொறுத்தப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 3 ஜிபி ரேம் மொபைலில் 32 ஜிபி மெமரியும் 4 ஜிபி ரேம் கொண்ட மொபைலில் 64 ஜிபி இன் பில்ட் மெமரியும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு 128 ஜிபி திறன் கொண்ட மெமரி கார்டையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். 3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் என இரு வகைகளில் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொலைபேசியில் 5.5 இன்ச் 1080 தொடுதிரை கொண்ட இந்த மொபைலில் 13 மெகாபிக்சல் கொண்ட இரண்டு லென்ஸ் ரியர் கெமராக்கள் இக் கையடக்க தொலைபேசியில் பொருத்தப்பட்டுள்ளன.

அத்துடன் 8 மெகா பிக்ஸல் முன் பக்க ப்ளாஷ் கொண்ட கெமராவும் முன் பக்க கைரேகை ஸ்கேனர், ஆன்ட்ராய்டும் 7.1.1 நௌகட் இயங்குதளம் அக்டோ – கோர் (Octa-core) குவால்காம், ஸ்னாப் 620 செயலி, 3000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்வாங்கப்பட்டுள்ளன. நாளை இந்த மொபைல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இன்னும் இதற்கான நிர்ணய விலை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(எம்|ச)

moto-g5-plus-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>