வெளிநாட்டு முதலீடுகள் 300% ஆல் அதிகரிப்பு


Ranil Wikramasinghe

இலங்கைக்கான வெளிநாட்டு மூலதனம் அதிகரித்துள்ளதாகவும் இதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான தேசிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் “FACETS Sri Lanka 2017″ எனும் கண்காட்சியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றுகையிலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு முதலீடுகள் 300 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தித்துறையினால் நாட்டின் வருமானமும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், கடனில் சிக்கியிருந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நேற்று ஆரம்பமான இக்கண்காட்சி எதிர்வரும் 03ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (எம்|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>