வரலாற்றுச் சிறப்பு மிக்க அக்பர் பள்ளிவாசல் பொதுமக்கள் பார்வைக்கு


Open Mosque Day Sri Lanka

வரலாற்றுச் சிறப்பு மிக்க மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசல் எதிர்வரும் ஞாயிறன்று (10) பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்படவுள்ளது.

இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் மஸ்ஜிதுல் அக்பர் நிர்வாகத்தினர் இணைந்து, மத நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்டு காலை 9-12மணி வரை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் அனைத்து மத சகோதரர்களும் கலந்துகொள்ள முடியும்.

கிவ் வீதி, கொழும்பு 2இல் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலில் அரபு எழுத்தணிக் கலை, முஸ்லிம்களின் பாரம்பரிய உணவு முறைகள் போன்றவற்றையும் சுவைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இஸ்லாமியர்களின் மத நம்பிக்கை, கலாச்சாரம் போன்றவற்றை எடுத்துக்காட்டி, மதங்களுக்கிடையிலான புரிந்துணர்வை உறுதிப்படுத்துவதுமே இந்த பள்ளிவாசல் சுற்றுப்பயணத்தின் எதிர்பார்ப்பாகும்.

நிகழ்வு தொடர்பான தகவல்கள் மற்றும் முன் பதிவுகளுக்கு 0766 633 629 மற்றும் 077 4835972 ஆகிய இலக்கங்களைத் தொடர்பு கொள்ளலாம். (நு)
21122506_1822688231377175_3871263518536574717_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>