FIFA உலகக் கிண்ணத்திற்கு ஐந்தாவது முறையாகவும் சவூதி அரேபியா தகுதி


saudi arabia fc

எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு சவூதி அரேபிய தேசிய கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது.

இதன்படி உலகக் கிண்ணத்திற்கு 5ஆவது முறையாகவும் தகுதி பெற்ற பெருமையை அவ்வணி பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஜப்பான் அணியை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலமே சவூதி அரேபிய அணி இந்த தகுதியைப் பெற்றது.

இதன்படி, ஆசியாவில் இருந்து சவூதி, ஜப்பான், ஈரான் மற்றும் கொரியா ஆகிய அணிகள் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1994ம் ஆண்டு பிபா உலகக் கிண்ணத்திற்கு முதன் முறையாக தகுதி பெற்ற சவூதி அரேபிய அணி அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 1998, 2002 மற்றும் 2006 ஆகிய 3 உலகக் கிண்ண போட்டிகளுக்கும் தொடர்ச்சியாக தகுதி பெற்றிருந்தது.

இதேவேளை 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா மற்றும் 2014ஆம் ஆண்டு பிரேசில் ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடர்களுக்கு சவூதி அரேபிய அணி தகுதி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (அ|நு)
saudi arabia fc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>