அமெரிக்க பகிரங்க டென்னிஸ் கிண்ணம் – மூன்றாவது முறையாகவும் நடால் சம்பியன்


rafel nadaal

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான ரபேல் நடால் மூன்றாவது முறையாகவும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளார்,

இது அவர் பெற்றுக்கொள்ளும் 16 வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

வருடத்தின் இறுதி கிராண்ட்ஸ்லாம் பட்டமான அமெரிக்க பகிரங்க கிண்ண போட்டிகள் இம்முறை 137 முறையாகவும் இடம்பெற்றது.

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் இடம்பெற்ற இதன் இறுதிப்போட்டியில், ஸ்பெயின் நாட்டை சேர்த்த ரபேல் நடால் மற்றும் தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த கெவின் ஆண்டர்சன் ஆகியோர் பலப்பரிட்சை நடாத்தினர்.

இதேவேளை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது தென்னாபிரிக்க வீரர் என்ற பெருமையை கெவின் ஆண்டர்சன் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த துவங்கிய ரபேல் நடால் மிகவும் ஆக்ரோஷமான முறையில் விளையாடி முதல் இரண்டு சுற்றுக்களையும் 6-3 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டார்.

மூன்றாவது சுற்றில் ஆண்டர்சன் முன்னேறியிருந்தாலும் மீண்டும் செயற்பட்ட நடால் மிகச்சிறப்பான முறையில் விளையாடி அச்சுற்றினையும் வெற்றிகொண்டார்.

இதன்படி குறித்த போட்டியில் 3-0 என்ற அடிப்படையில் ரபேல் நடால் இலகு வெற்றி பெற்றார். இந்த பட்டமானது நடால் இவ்வருடத்தில் பெற்றுக்கொள்ளும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும் .

இதற்கு முன்னர் இவ்வருடம் இடம்பெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் கிண்ண போட்டியிலும் நடால் சாம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அ|ஸ)

rafel nadaal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>