ஒரே வீட்டில் 8 பேர் சுட்டுக்கொலை – டெக்சாஸில் சம்பவம்


5184

ஒரே வீட்டைச் சேர்ந்த 7 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு டெக்சாஸ் நகரில் பிளானோ பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போது பொலிஸார் மீது அங்கு பதுங்கியிருந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் குறித்த சந்தேக நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சந்தேக நபர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டுக்கு சென்ற கொலையாளி அங்கிருந்த பெண் ஒருவருடன் விவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து கொலையாளி வீட்டிலிருந்தோரைச் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. (எம்|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>