சரத் பொன்சேகாவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை


Gen_Sarath_Fonseka

அமைச்சர் பீல்டு மார்ஷல் சரத் பொன்சேகாவை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேச விமுக்தி மக்கள் கட்சியின் செயலாளர் கலகம தம்மரங்ஸி தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தேர்தலொன்றை வெற்றிகொள்ள முடியாத இவர் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க செயற்படுவதன் காரணமாக அமைச்சரவையில் வைத்துக்கொள்ள தகுதி அற்றவர் என கலகம தம்மரங்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

சோஷலிச மக்கள் முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கும் போதே கலகம தம்மரங்ஸி தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. (நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>