தான் போட்ட உத்தரவுக்கு செயற்பட்டவர்கள் சிறையில்


image_d720c753ce

தனது உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றுக்காக லலித் வீரதுங்கவும், அனுஷ பெல்பிட்டவும் வீணாக தண்டனை அனுபவித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“சில் ஆடை” விநியோகிப்பது தவறான செயல் அல்ல. இருப்பினும், இதனை தேர்தல் காலத்தில் செய்ததுவே தண்டனை வழங்கக் காரணமாக அமைந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டு எதிர்க் கட்சியின் எம்.பி.கள் பலரும் இன்று (11) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோரின் சுக துக்கம் விசாரித்தனர். இதன் போது கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>