லலித் வீரதுங்க-அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு தண்டப் பணம் செலுத்த 1000 பிக்குகள்


lalith and anusha

குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அரச அதிகாரி அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்தை செலுத்துவதற்கு இந்நாட்டிலுள்ள பிக்குகள் முன்வந்துள்ளதாக பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த தண்டப் பணத்தை சேகரிப்பதற்கு 1000 பிக்குகளைக் கொண்டு சமயக் கிரியைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்காக வேண்டி கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள சம்புத்தாலோக விகாரையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு பிக்குகள் ஒன்று கூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலும் இது போன்ற சமய நிகழ்வுகளில் பிக்குகள் ஈடுபடவுள்ளனர். இவற்றின் மூலம் சேகரிக்கப்படும் நிதி 18 ஆம் திகதி கொழும்பில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  (மு)

 

 

 

 

3 comments

  1. The two guys have enough money. Their own money can be paid through 1000 Bikkus for political gain. MR knows how to do tricky politics.

  2. 1000 பிக்குகளும் பிச்சை எடுக்கிறார்களா?

  3. இவர்கள் பனம் எப்படி சம்பாரித்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>