தென்னாபிரிக்க ஒருநாள் அணித்தலைவராக டூ ப்ளசிஸ்


du plasis

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் ஒருநாள் அணித்தலைவராக பாப் டூ ப்ளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் அணித்தலைவராக கடமையாற்றிய A.B.D. வில்லியர்ஸ் பதவி விலகியதை தொடர்ந்தே பாப் டூ ப்ளசிஸ் ஒருநாள் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிக்கையினை நேற்று தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதன்படி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது ஆகிய மூன்று வகையான போட்டிகளுக்கும் பாப் டூ ப்ளசிஸ் தென்னாபிரிக்க அணிக்கு தலைமை தங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் A.B.D. வில்லியர்ஸ் உபாதைக்குள்ளாகியிருந்த சந்தர்ப்பங்களில் 9 தடவைகள் டூ ப்ளசிஸ் தென்னாபிரிக்க அணியின் ஒருநாள் அணித்தலைவராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தலைமை பொறுப்பேற்றுள்ள பாப் டூ ப்ளசிஸிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் சிறந்த ஒரு தலைவராக செயற்படுவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் ஹரூன் லோகார்ட் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது அணியின் தலைவராக செயற்பட்டு வந்த டூ ப்ளசிஸ் எதிர்வரும் மாதம் பங்களாதேஷுடனான ஒருநாள் போட்டியோடு அணியின் நிரந்தர ஒருநாள் அணித்தலைவராக கடமையாற்றுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் மற்றும் உலக பதினொருவர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது போட்டியில் உலக பதினொருவர் அணிக்கு பாப் டூ ப்ளசிஸ் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. (அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>