எகிப்தில் தீவிரவாத தாக்குதல் – 18 பாதுகாப்பு அதிகாரிகள் பலி


egypt3

எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பயணித்த வாகனங்களின் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதையின் இரு பகுதிகளிலும் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததன் காரணமாக பாதுகாப்பு வாகனங்கள் முற்றாக அழிக்கப்பட்டதாக சர்வதேச தெரிவிக்கின்றன.

குண்டு வெடித்ததன் பின்னர் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனாலேயே அதிகமான பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததாகவும் ஆயுத வாகனங்கள் சென்ற பாதையை இடைமறித்து வாகனம் ஒன்று சென்றதன் பின்னரே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் எகிப்தின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னைய தினம் எகிப்திய பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் எகிப்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>