சர்ச்சை வீராங்கனை பிரியங்கா பன்வார்க்கு 8 வருட தடை


untitled-7

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனையான பிரியங்கவுக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இவர் 2 ஆவது முறையாகவும் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதை அடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்குழுவினால் மேற்கொண்டு வந்த விசாரணையின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது.

மேற்படி தீர்ப்பின் பிரகாரம் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 8 வருடங்கள் விளையாட்டுகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

29 வயது நிரம்பிய பிரியங்கா பன்வார் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. (எம்|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>