30 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சன சமூக நிலையம் மஸ்கெலியாவில் திறந்து வைப்பு


DSC09325

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க மஸ்கெலியா பெயார்லோன் தோட்டத்தில் சுமார் 30 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சனசமூக நிலையம் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது ஆலய நிர்மாண பணிக்காக 1 லட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான சீமெந்து பக்கட்டுக்கள், மற்றும் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் விளையாட்டு கழகங்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம். ரமேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. இராஜாதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், முன்னாள் அம்பகமுவ பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் தினேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சனசமூக நிலையத்தின் மூலம் இங்கு வாழும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது. (நு)

-க.கிஷாந்தன்-
DSC09325

DSC09342DSC09336

DSC09350

 

DSC09321

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>