வாக்குகள் எண்ணும் பணிகளில் 95 வீதம் நிறைவு – மீண்டும் நோர்வே பிரதமராகிறார் சொல்பெர்க்


norway erna solberg

நோர்வே நாட்டின் பிரதமர் சொல்பெர்க் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதை தொடர்ந்து தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடர்வதற்கு தகுதியை பெற்றுள்ளார்.

நோர்வேயின் பொதுத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணிகளில் 95 வீதமான பணிகள் நிறைவுற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற நோர்வேயின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எர்னா சொல்பெர்க் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்றத்தின் 169 மொத்த ஆசனங்களில் 89 ஆசனங்களை தமதாக்கிக் கொண்டதன் மூலமே இத்தகுதியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (எம்|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>