மருத்துவ பீட மாணவர் ஒருங்கிணைப்பாளர் ரயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்


Ryan Jayalath Rayan Jayalath

மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் 20ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அவர்மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார அமைச்சினுள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்ததாக மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (எம்|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>