கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாகத்தின் ஆராய்ச்சி மாநாடு


20170913_093829

இன்று எம்மிடையே காணப்படும் வளங்களை நாளைய நலனிற்காக பயன்படுத்தல் எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இன்று (13) திருகோணமலை கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை கிழக்குப் பல்கலைக்கழக முதல்வர் கலாநிதி வி.கனகசிங்கம் தலைமையில் ஆரம்பமான இம்மாநாட்டில் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம, சிறப்பு அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டீ சில்வா, கௌரவ விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் தம்பி முத்து ஜெயசிங்கம், வெளிநாட்டு பல்கலைக்கழக கலாநிதிகள், பேராசிரியர்கள் ஏனைய உள்நாட்டுப் பல்கலைக்கழக கலாநிதிகள், உயரதிகாரிகள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

விஞ்ஞானமும் தொழில்நுப்பவியலும் மருத்துவம், மற்றும் சுகாதார பராமரிப்பு விஞ்ஞானம், விவசாயம் மற்றும் சுற்றாடல் அறிவியல், சமகால முகாமைத்துவம், பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாடல், அழகியல், மொழி மொழியியல் இலக்கியம், சமூக விஞ்ஞானம், சுற்றுலா கலாச்சார பாரம்பரியம், கல்வி மற்றும் உயர்கல்வி குடியுரிமை எனும் பிரதான தலைப்புக்களை முதன்மைப்படுத்தி ஆய்வுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

திருகோணமலை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டதுடன் இரு தினங்கள் தொடர்ச்சியாக நாளையும் (14) இடம்பெறவுள்ளது.

இவ் ஆய்வு மாநாட்டில் வெளிநாட்டு ஆய்வாளர்களின் 06 ஆய்வுகள் உள்ளடங்களாக மொத்தமாக 66 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறவுள்ளது.

வேலையில்லா பட்டதாரிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இவ் ஆய்வில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (நு)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>