தமிழர் என்றாலே இன ரீதியாக வகைப்படுத்துவது சிலரது நிலைப்பாடாகும் – ராஜித


9a7db60100a10e62758ed5e42cfaa69f_XL

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் தமிழர் என்பதனாலேயே அவருக்கு எதிராக இன ரீதியில் குற்றம் சுமத்தப்படுகின்றது என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

LTTE அமைப்பிற்கு நிதி உதவி வழங்கியுள்ளதாக ஆர்.பாஸ்கரலிங்கத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவினால் சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டானது தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஒப்பானது என செய்தியாளரினால் அமைச்சருக்கு சுட்டிக்காட்டிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் , தமிழர் என்றாலே இவ்வாறு இன ரீதியாக வகைப்படுத்துவதே இவர் போன்றோரின் நிலைப்பாடாகும் என தெரிவித்த அமைச்சர் ஒலிவாங்கிக்கு முன்னாள் பேசுவதை குற்றச்சாட்டாக எடுக்க முடியுமா? எனவும் இவருக்கு எதிராக எங்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது? எனவும் ஊடகவியலாளர்களிடம் வினவினார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.(ச)

9a7db60100a10e62758ed5e42cfaa69f_XL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>