ஒருகொடவத்தை மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு


02

தேசிய பயிலுநர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் அதிகார சபையின் (NAITA) கீழ் இயங்கும் ஒருகொடவத்தை மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தொகுதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (13) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

புதிய களனிப் பால நிர்மாணக் கருத்திட்டத்திற்கான காணியை அளவிடுகையில் ஒருகொடவத்தையில் அமைந்துள்ள மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனம் அமைந்திருந்த காணியும் கையகப்படுத்தப்பட்டது. அதற்கேற்ப ஜப்பான் ஒத்துழைப்புக் கடனுதவியின் கீழ் 1540 மில்லியன் ரூபா செலவில் ஒருகொடவத்தை பிரதேசத்தில் புதிய காணியில் மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத் தொகுதி அதிநவீன தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், நிர்வாகம் மற்றும் பயிற்சி பிரிவு ஆகியன 8,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன.

பயிற்சி நிலையத்தில் காணப்பட்ட அனைத்து இயந்திரங்களும், பொறிகளும் திருத்தப்பட்டு மீள நிறுவுதல், நவீன தொழில்நுட்ப முறைகளைக் கற்பதற்கான பயிற்சி இயந்திரங்கள் ஐந்தினை புதிதாக நிறுவுதல், அதிகளவான பயிலுநர்களை புதிதாக சேர்த்துக்கொள்ளக் கூடியதாக இருத்தல் மற்றும் எதிர்காலத்தில் தேவையேற்படின் கட்டிடத்தில் மேலும் 05 மாடிகளை அதிகரித்துக்கொள்ளக்கூடிய வகையில் ஆரம்பகட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.

ஜப்பான் – இலங்கை நட்புறவின் நினைவுச் சின்னமாக 1985 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனமானது, எமது நாட்டிற்கு கொண்டுவரப்படும் ஜப்பானிய மோட்டார் வாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்குவதற்கு தொடர்ச்சியாகத் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றது.

அமைச்சர் சந்திம வீரக்கொடி, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பிரதி அமைச்சர்கள் கருணாரத்ன பரனவித்தான, பிரசன்ன சோலங்கஆரச்சி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் அமைச்சின் செயலாளர் பீ.ரனேபுர உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர். (நு)

021812051716

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>