‘சில் ஆடை’ விவகாரம் : மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றம் முன் நிறுத்த முடியும் (Video)


Rajitha Senarathna

‘சில் ஆடை’ விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நீதிமன்றம் முன் நிறுத்த முடியும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘சில் ஆடை’ விநியோகிப்பது தான் எடுத்த தீர்மானம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இது தொடர்பிலேயே அமைச்சர் கருத்துத் தெரிவித்தார்.

“குறித்த வழக்கு 24 நாட்கள் விசாரணை செய்யப்பட்டது. அப்பொழுது அவர் நீதிமன்றத்துக்கு வருகைதந்து இதனைத் தெரிவித்திருக்க வேண்டும். வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் இவ்வாறான பொய்களை சொல்கிறார்.” என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. (நு)

முழுமையான வீடியோ:

One comment

  1. Kappal vanginawan unna yaru munniruthuwathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>