வித்யா வழக்கின் தீர்ப்பு 27 ஆம் திகதி


images

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்யா  வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகிய மூன்று நீதிபதிகள் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

எதிரிகள் சார்பான சட்டத்தரணிகளின் தொகுப்புரைகள் நிறைவுபெற்றதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி தீர்பு வழங்கப்படுமென நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>