மீண்டும் அருந்திகவுக்கு அமைச்சுப் பதவி ?- ஜனாதிபதியுடன் நிகழ்விலும் பங்கேற்பு


juy

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (13) நடைபெற்ற ஒருகொடவத்தை மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தொகுதி திறப்பு நிகழ்வில் ஜனாதிபதியினால் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாந்டோவும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சந்திம வீரக்கொடி, முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாந்டோவை அறிமுகம் செய்த விதம் குறித்தும் பலரதும் அவதானம் ஈர்க்கப்பட்டுள்ளது.

சில ஊடகங்கள் அமைச்சர் சந்திம வீரக்கொடியின் பேச்சில், அருந்திக பெர்ணான்டோவுக்கு அமைச்சுப் பதவியொன்று மீண்டும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதை சிலேடையாக உணர முடிவதாக கூறியிருந்தது.

எது எவ்வாறிருப்பினும், இது குறித்து அமைச்சர் சந்திம வீரக்கொடியிடம் பின்னர் வினவப்பட்ட போது,

“ அவர் அரசாங்கத்தை மாற்றப் போவதாக கூறிக் கொண்டு சென்றார். மீண்டும் வந்துள்ளார். அவர் மது கட்சியைச் சேர்ந்த ஒருவர் தானே. அமைச்சுப் பதவியொன்று அவருக்கு மீண்டும் வழங்கப்படுமா? என்பது குறித்து என்னால் இப்போதைக்கு கூற முடியாதுள்ளது” என கூறியுள்ளார். (மு)

 

 

2 comments

  1. ஏற்கனவே நாங்க சொன்னோம் அருந்திக அவ்வளவு பெரிய ஆள் இல்லையென்று இப்போ மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு.இந்த ஆட்சி நல்லாட்சியோ.,பொல்லாட்சியோ இதவிட்டுப்போக வாயாடிகள் பின்வாங்குகிறார்கள் என்பது உண்மை.சிலருக்கு ஆப்பு வைத்ததும் மாகாணசபைகளில் 20ம் வெற்றி பெறுது.

  2. தேங்காய்கல்லன்மார்களை.அமைச்சர்.பதவியில்.இருந்து.நீக்விட்டார்கள்.இன்னும்17பேர்.இருக்கிறாங்க.அவர்காளையும்நீக்கிவிடுவார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>