ஜனாதிபதி சுயநலமில்லாதவர், தலைவர்களுக்கு சிறந்த முன்மாதிரி- மல்வத்து பீடம்


image_1350f9d388

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் தலைவர்களுக்கு போலவே, எதிர்கால தலைவர்களுக்கும் சிறந்த முன்மாதிரியை வழங்கியுள்ளதாக மல்வத்து பீட அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் இருந்து அன்பளிப்புச் செய்யப்பட்ட யானையை தலதா மாளிகைக்கும், ரஷ்யாவிலிருந்து வாளை தேசிய அருங்காட்சியகத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். தனக்கு வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் பாரிய அன்பளிப்புக்களை பொது மக்களின் நலன்களுக்காக தியாகம் செய்யும் அதேநேரம், மறுபுறத்தில் சில அரசியல்வாதிகள் தனக்கு கிடைக்கும் அன்பளிப்புக்களை தனியான அருங்காட்சியகங்களை அமைத்து தன்னுடைய சொத்தாக பாதுகாத்து வருவதாகவும் தேரர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இன்று (13) மல்வத்து மகா விகாரைக்கு சென்று ஆசீர்வாதம் பெற்ற போது விமலதர்ம தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (மு)

 

One comment

  1. அப்படிபட்ட.நாட்டின்.தலைவர்.தேவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>