குளவி தாக்குதல் – 20 பேர் பாதிப்பு


waspmain_1361335a

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 20 பேர் நாவலப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 13 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், 7 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது. (நு)

-க.கிஷாந்தன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>