மடிக்கும் வசதி கொண்ட புதியவகைத் தொலைபேசி சம்சுங் நிறுவனத்தினால் அறிமுகம்


59d703fa167a0-IBCTAMIL

தொழில்நுட்ப சந்தையில் சோதைனை முயற்சியில் ஈடுபடுத்திய மடிக்கும் வசதியுடன் கூடிய தொலைபேசியை சந்தைக்கு கொண்டுவருவதற்கு சாம்சுங் நிறுவனம் முயற்சித்து வருகின்றது.

மனிதனின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்ட கையடக்கத் தொலைபேசியை மக்கள் விரும்பும் வகையில் மக்கள் வசதிக்கேற்ப மடித்து வைத்துக் கொள்ளக் கூடிய புதிய வகையான கையடக்கத் தொலைபேசியை உருவாக்குவதில் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதனடிப்படையில் போல்டிங் மொபைல் போனை விற்பனைக்கு கொண்டுவரும் முயற்சியில் சாம்சுங் நிறுவனம்த களத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

மடித்து வைத்துக்கொள்ளக் கூடிய போல்டிங் மொபைல் போனை விரைவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக கடந்த 2013 ஆம் ஆண்டு சாம்சுங் நிறுவனம் அறிவித்திருந்தது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய குறித்த போல்டிங் கையடக்கத் தொலைபேசி விரைவில் வௌியாக இருப்பதாக சம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

59d703fa167a0-IBCTAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>