தனுஷ்க குணதிலகவுக்கு போட்டித்தடை


Danushka Gunathilaka

இலங்கை கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு 6 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இறுதியாக நடைபெற்ற இந்தியாவுடனான போட்டித்தொடரின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பில் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, குணதிலக குறித்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தனுஷ்க குணதிலகவுக்கு 6 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒப்பந்தத்தின் படி அவரது வருடாந்த சம்பளத்தில் 20 வீதமான தொகை அபராதமாக அறவிடுவதற்கும் இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

குறித்த போட்டி தடை செப்டம்பர் 30 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. (அ|நு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>