மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான குளம் அமைக்கும் பணி ஹட்டனில் ஆரம்பம்


DSC01155

ஹட்டன் நோர்வூட் நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் நன்னீர் மின்பிடி வளர்ப்பை ஊக்குவிக்க மத்திய மாகாண விவசாய மற்றும் மீன்பிடிதுறை அமைச்சின் ஊடாக 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் ஊடாக குறித்த பகுதியில் மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான குளம் அமைக்கும் பணியின் ஆரம்பகட்ட வேலைநேற்று நிவ்வெளிகம தொழிற்சாலை பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மத்திய மாகாண விவசாய மற்றும் மீன்பிடிதுறை அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் இதன் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் தலைவர் வெள்ளையன் தினேஷ், நன்னீர் மீன்பிடித்துறையின் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.(ச)

-கிஷாந்தன்-

DSC01155

DSC01163

DSC01168

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>