கவனமாகச் சென்று வாருங்கள் – பொலிஸ் ஆசீர்வாதம்


image_e385704c6f

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குடும்பத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆசிர்வதித்து கவனமாக சென்று வாருங்கள் என்று அனுப்பி வைத்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் பெங்களூர் பிரதேசத்தின் அனந்ப்பூர் மாகாண பகுதியில் தலைக்கவசமின்றி தந்தை, தாய், மூன்று பிள்ளைகள் மோட்டார் சைக்கிளில் வருகை தந்துள்ளனர்.

இதனை அவதானித்து குறித்த வாகனத்தை நிறுத்திய கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி பி.சுபா குமார் அவர்களுக்கு தண்டம் எதுவும் விதிக்காது கவனமாக சென்று வாருங்கள் என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த சம்பவத்தை அருகிலிருந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியதன் காரணமாக அது தற்பொழுது இந்தியாவின் பல பாகங்களிலும் தீயாக பரவி வருகிறது.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எவ்வாறு எத்தனை தண்டப்பணம் தான் விதிப்பது என்றும் பொதுமக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவது இல்லை எனவும் குறித்த பொலிஸ் அதிகாரி புகைப்படத்தை பதிவேற்றியதன் பின்னர் பின்னூட்டல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (அ|நு)
image_e385704c6f

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>