புகையிரத சாரதிகள் பணிநிறுத்த போராட்டம் – பயணிகள் பெரும் சிரமத்தில்


DSC01280

புகையிரத சாரதி உதவியாளர்களைப் பணிக்கு இணைத்துக் கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து நேற்று இரவு முதல் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் புகையிரதங்களில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் மலையகத்திலும் காலை வேளையில் பணிகளுக்கு செல்பவர்கள், பாடசாலை மாணவர்கள் என பெருந்திரளான பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதோடு, பஸ்களில் தமது பயணங்களை மேற்கொண்டனர்.

எனினும் முடிந்தவரைப் புகையிரத போக்குவரத்து நடவடிக்கையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரி குறிப்பிட்டுள்ளார். (கி|ஸ)

DSC01287 DSC01280 DSC01278

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>