ஒய்வுபெற்ற ரயில் சாரதிகளை ரயில்வே திணைக்களம் மீளழைப்பு


2be921ea7a2a9a1742faffd5ada68728_XL

ஒய்வுபெற்ற, ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த ரயில் சாரதிகளையும் மற்றும் காவலர்களையும் உடனடியாக சேவையில் ஈடுபடுமாறு ரயில்வே திணைக்களம் அறிவிப்புவிடுத்துள்ளது.

மேலும் அவ்வூழியர்களை இன்று மதியம் தொடக்கம் சேவையில் ஈடுபடுமாறு அறிவித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது மேலாளர் எஸ்.எம் அபயவிக்ரம தெரிவித்தார்.

நேற்று மாலை முதல் ரயில் சாரதிகள் மற்றும் காவலர்கள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பயணிகள் பாரிய சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், அதிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்லும் ஊழியர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார்.

தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தகுந்த தீரவொன்று கிடைக்கும் வரை தாம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ரயில்வே சாரதிகள் மற்றும் காவலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(எம்|ச)

 

 

3 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>